Deva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph

தேவா பிரசன்னம் தாருமே

தேடி உம்பாதம் தொழுகிறோம்

இயேசுவே உம் திவ்ய நாமத்திலே

இன்பமுடன் கூடி வந்தோமே

 

தேவா பிரசன்னம் தாருமே

தேடி உம்பாதம் தொழுகிறோம்

.

சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம்

சாந்த சொரூபி என் இயேசுவே

ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்

ஆண்டவரைத் தொழுகிறோம்                – தேவா

.

வானம் உமது சிங்காசனம்

பூமி உமது பாதஸ்தலம்

பணிந்து குனிந்து தொழுகிறோம்

கனிந்தெம்மைக் கண் பாருமே                – தேவா

.

கர்த்தர் செய்த உபகாரங்கள்

கணக்குரைத்து எண்ணலாகுமோ

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி

இரட்சகரைத் தொழுகிறோம்                 – தேவா

.

கர்த்தர் சமூகம் ஆனந்தமே

பக்தர் சபையில் பேரின்பமே

கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்

சுத்தர்கள் போற்றும் தேவனே                – தேவா

.

நூற்றிருபது பேர் நடுவே

தேற்றரவாளன் நீர் வந்தீரே

உன்னத ஆவியை ஊற்றிடுமே

மன்னவனே இந்நேரமே                     – தேவா

.

எப்போ வருவீர் என் இயேசுவே

ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே

பறந்து விரைந்து தீவிரமே

இறங்கி வாரும் இயேசுவே                  – தேவா

deva-prasanname

SHARE