நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தேவனே
நம்பினோரை காக்கும் இயேசுவே
வருங்கள் பரிசுத்த தேவனை
பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம் .
நம்பிக்கையும் நீர் தானே
நங்கூரமும் நீர் தானே
நாங்கள் நம்பும் தேவன் நீர் தானே -2
நீர் தானே .
பார்வேனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை
துதிப்போம் (துதிப்போம்)
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவ – நம்பிக்கையும் நீர் தானே .
கன்மலையை பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீரூற்றை தந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வரட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் – நம்பிக்கையும் நீர் தானே .
கல்லரையை பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் – நம்பிக்கையும் நீர் தானே .
சேனைகளை கவிழ்த்தவரை துதிப்போம் (துதிப்போம்)
சத்துருவை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
போராட்டம் தொல்லைகள் வந்தாலும் யுத்தங்கள் நேர்ந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவ – நம்பிக்கையும் நீர் தானே .
என் நம்-பிக்-கை நீர் தானே
என் நங்-கூ-ரம் நீர் தானே
You must log in to post a comment.