Yesuvae Immanuvelarae [Neerae 5]-Gersson Edinbaro

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே

மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே

இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே

வழியாய் வந்த இயேசுவே (2)

இயேசுவே இம்மானுவேலரே

மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல

சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல

உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்

மகனாய் உன்னை மாற்றுவார் (2)

-இயேசுவே

சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே

எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே

பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல

இயேசு செலுத்திவிட்டாரே (2)

-இயேசுவே

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே

மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே

இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே

வழியாய் வந்த இயேசுவே (2)

-இயேசுவே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.