Yesuvai Pol Oru Theivamillai [Neerae 4]-Gersson Edinbaro

yesuvai-pol

 

இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை

இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2

மேலே உயரே உயரே இருந்தவரே

விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

 

தண்ணீரை ரசமாக மாற்றீனிரே

அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே x 2

கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே

கடும் காற்று உம்மை கண்டு அடங்கினதே

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

 

லாசருவே நீ வா என்றதும்

அன்று மரித்தவன் உயிர் பெற்று எழுந்தானே x 2

உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே

அது ஜீவனை தந்ததும் நிச்சயமே

 

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

 

வாரால் அடித்து அறைந்தனரே

உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே x 2

ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்

நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே

 

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.